பதிவு செய்த நாள்
26
டிச
2017
01:12
பர்கூர்: கிருஷ்ணகிரி அடுத்த பர்கூர் ஒன்றியம், ஐகொந்தம் கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் சுவாமி கோவிலில், மீனாட்சி, கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், மணமகள் சீர்வரிசையை, கிருஷ்ணராஜி ராவ் - ராஜிம்மாள்பாய் தம்பதியினரும், மணமகன் சீர்வரிசையை, சின்னப்பன் - ஜெயம்மாள் குடும்பத்தினரும் கொண்டு வந்தனர். திருக்கல்யாணத்தை, ஜெகதேவியை சேர்ந்த பாலசுப்ரமணிய சாஸ்திரி முன்னின்று நடத்தி வைத்தார். கல்யாணம் முடிந்து சுந்தரேஸ்வரரும், மீனாட்சி அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.