பதிவு செய்த நாள்
26
டிச
2017
01:12
சென்னிமலை: ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், காங்கேயம் பிரதான சாலையில், எல்லை மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், மார்கழி மாதம், பொங்கல் விழா வெகுவிமர்சையாக நடக்கிறது. நடப்பாண்டு விழா, நாளை இரவு, பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. இதை தொடர்ந்து நாள்தோறும், சிறப்பு பூஜைகள், வழிபாடு நடக்கும். ஜன.2ல் இரவு, 7:00 மணிக்கு கும்பம் பாலித்தல் நடக்கிறது. ஜன.,4ல் காலை முதல் பொங்கல் வைபவம் நடக்கிறது. மறுநாள் மறுபூஜை மற்றும் மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை அம்மாபாளையம், சென்னிமலை, காட்டூர், வெட்டுகாட்டுபுதூர் கிராம கவுண்டர்கள் மற்றும் கோவில் நிர்வாக குழுவினர் செய்கின்றனர்.