பதிவு செய்த நாள்
26
டிச
2017
01:12
சேலம்: சேலத்தில், வரும், 27ல், திருமலைக்கு பூக்கள் தொடுத்து அனுப்பும் விழா நடக்கிறது. திருமலை திருப்பதியில் டிச., 29ல், வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதையொட்டி திருமலை ஸ்ரீ திருவேங்கடமுடையான் நித்ய புஷ்ப கைங்கர்ய சபா சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், சேலத்தில் இருந்து, இரண்டு டன் வாசமுள்ள வண்ண வண்ண பூக்களை சரங்களாக தொடுத்து அனுப்பும் விழா வரும் வரும், 27 ல் நடக்கிறது. சேலம், சங்கர் நகரில் உள்ள வன்னியர் குலசத்திரியர் திருமண மண்டபத்தில் நடக்கும் விழாவில், பூக்களை தொடுக்க விரும்பும் பக்தர்கள் வரும், 27 காலை, 7:00 மணி முதல் மாலை, 3:00 மணி வரை பங்கேற்று பயன்பெறலாம்.