பதிவு செய்த நாள்
27
டிச
2017
11:12
சாணார்பட்டி: சாணார்பட்டியில் உள்ள ஐயப்பன் கோயிலில் பக்தர்கள்சார்பாக மண்டல பூஜை நடந்தது. மாலை அணிந்த பக்தர்களின் வீடுகளில் இருந்து 50 க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்தனர். சுவாமிக்கு நெய், பால், சந்தனம், பன்னீர், இளநீர், தயிர், தேன், விபூதி, திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது.
பொங்கல், தேங்காய், பழம் படையிலிட்டு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை, அன்ன தானம் நடந்தது. மாலையில் விளக்கு வழிபாட்டுடன் அலங்கார மின்ரத பவனி நடந்தது. சாணார்பட்டி ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமராசு, பா.ஜ., ஒன்றிய செயலாளர் தனபால், தொழிலதிபர்கள் அழகேஸ்வரன், சந்திரசேகரன், அப்துல் ரஹீம், கே.ஏ.ஆர்., மொகைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாண்டி, கருணாகரன், ஜெய்சிங் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.