பதிவு செய்த நாள்
27
டிச
2017
12:12
காஞ்சிபுரம் : மார்கழி பனியையும் பொருட்படுத்தாமல், காஞ்சியில் பள்ளி மாணவ, மாணவியர் உற்சாகத்துடன், பஜனையில் ஈடுபட்டுள்ளனர்.
மார்கழி வெற்றிலையை மாடு கூட தின்னாது என, கூறுவதுண்டு. அதாவது, மார்கழி குளிரில் வெற்றிலை, தன்னுடைய சுவையை இழந்து விடுமாம். அந்த அளவிற்கு குளிரின் தாக்கம் இருக்குமாம்!
சாதாரண நாட்களில், அதிகாலை எழுந்து நடைபயிற்சிக்கு செல்வோர் கூட, மார்கழி மாத குளிருக்கு, இதமாக போர்வையை போர்த்தி உறங்கி விட்டு, தாமதமாக எழுந்து செல்வர்.
விழித்து எழுபவரை கூட, மார்கழி பனி அடக்கி உறங்க வைக்கும். ஆனால், காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவ - மாணவியர், அதிகாலை எழுந்து நீராடி, காலை, 5:30 மணிக்கு, புத்தேரி தெருவில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஒன்று திரள்கின்றனர்.
வெடவெடக்கும் குளிரில், மாணவர்கள், மேல் சட்டை அணியாமல், வேட்டி அணிந்து, நெற்றி யில் விபூதியும், கழுத்தில் மாலை அணிந்து, மார்பில் சந்தனத்தை பூசி, பக்தி பழமாக காட்சிய ளிக்கின்றனர்.
சுப்ரமணியசுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி யெழுச்சி, சிவபுராணம் உள்ளிட்டவற்றை பஜனையாக பாடியபடியே, கச்சபேஸ்வரர் கோவிலு க்கு சென்றனர்.
அங்கு சுவாமியை வழிபட்டு, உட்பிரகாரம், வெளிபிரகாரத்தை வலம் வந்து, பின், மீண்டும் சுப்பிரமணியசுவாமி கோவிலை வந்தடைந்தனர். அங்கு சுவாமிக்கு, அபிஷேகம் மற்றும் தீபாராதனை முடிந்தபின், வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.
சிறுவர்கள் அதிகாலையில் குளித்து, பஜனை பாடல்களை பாடி செல்வதை, அவ்வழியே செல் வோர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இது குறித்து, மாணவர்களை வழிநடத்தி செல்லும் குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
அதிகாலை எழுவதன் மூலம், மாணவ - மாணவியருக்கு ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அன் றைய நாள் முழுவதும் புத்துணர்வு ஏற்படுகிறது. ஆன்மிக நெறியை கடைபிடிப்பதால், மாணவ - மாணவியரிடம் ஒழுக்கம் ஏற்படுகிறது.
இங்கு வரும், பெரும்பாலான மாணவ - மாணவியரை, பெற்றோர் எழுப்புவதில்லை. அதிகா லையில் அவர்களாகவே விழித்து எழுகின்றனர்.
மார்கழி மாதம் முழுவதும், நடைபெறும், பஜனையில், 176 மாணவ - மாணவியர் பங்கேற் கின்றனர். இதற்காக வருகைப்பதிவேடு ஒன்றையும் பராமரித்து வருகிறோம். இவ்வாறு அவர்கூறினார்.