பதிவு செய்த நாள்
27
டிச
2017
01:12
பென்னாகரம்: பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் முனியப்ப சுவாமி கோவில் திரு விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் பலியிடப்பட்டன. 50 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் அக்ரஹாரத்தில் உள்ள முனிய ப்ப சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனை த்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் மார்கழி மாதம், இரண்டாவது செவ்வாய் கிழமையில், இந்த கோவிலில் திருவிழா நடக்கும். இந்தாண்டு திருவிழா நடந்தது. சிக்கனம்பட்டி, புதூர், அரிச்சந்திரனூர், அக்ரஹாரம், கெட்டூர், நல்லாம்பட்டி உட்பட ஏராளமான கிராமங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், முனியப்ப சுவாமிக்கு விரதம் இருந்து, மாலை அணிந்து வந்து வழிபட்டனர். பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக, 1,000க்கம் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டனர். விழாவில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அசம்பாவிதங்களை தவிர் க்க, பென்னாகரம் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, இந்து அறநிலையத் துறை நிர்வாக அதிகாரி ராஜா மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.