ஊட்டியில் எத்தையம்மன் பண்டிகை ஜன 3ம் தேதி உள்ளூர் விடுமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27டிச 2017 01:12
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில் எத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி, 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிக்கை:நீலகிரி மாவட்டத்தில் வரும், ஜனவரி, 3ம் தேதி புதன்கிழமை எத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட் டுள்ளது. இதற்கு பதிலாக ஜனவரி, 20ம் தேதி மாவட்டத்தில் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.