பதிவு செய்த நாள்
28
டிச
2017
12:12
கீழக்கரை: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை,ஆராட்டு விழா, பேட்டை துள்ளல் ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது.டிச.,18 காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம்,தீபாராதனை, பூதபலி நடந்தது. மாலை பள்ளிவேட்டை புறப்பாடு நடத்தப்பட்டு, இரவு 10:00 மணியளவில் சயன பூஜை நடந்தது. நேற்று காலை 4:00 மணிக்கு கோ பூஜையும், பள்ளி உணர்தல் நிகழ்விற்கு பிறகு முத்துநாச்சியம்மன் கோயிலில் இருந்து ஐயப்பன் வேடமிட்ட சிறுவன் யானை மீது அமர்ந்து ஐயப்பன் படம் வைத்தும், ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக வண்ணப்பொடிகளை உடலில் பூசியவாறு பேட்டை துள்ளலுடன் ஆடிப்பாடி வந்தனர். காலை 9:30 மணிக்கு உற்சவரை பல்லக்கின் மூலம் கோயிலின் பின்புறமுள்ள பஸ்மக்குளம் கொண்டு சென்று சரணகோஷம் முழங்க, கருடன் வட்டமிட்டவுடன் தாம்பூலத்தட்டில் வைத்து மஞ்சள் நீரால் ஆராட்டு விழா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பஸ்மக்குளத்தில் புனித நீராடிய பின்னர் மூலவருக்கு மகா அபிஷேக ஆராதனை, உலகநன்மைக்கான கூட்டு வழிபாடு நடந்தது. சன்னிதானத்தின் முன்புறம் கொடியிறக்கம் செய்யப்பட்டது. அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மோகன்சுவாமி, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர். விழாவில் எம்.ஆர்.மருதுபாண்டியன், பிரபாகரன், ராஜமணிகண்டன், பிரவின்குமார், கண்ணபிரான், கார்த்திக்குமார், விஷ்ணுவர்த்தினி, காவியப்பிரியா,லக்சன்யா, மல்லிகை முனியசாமி, முத்துக்குமார் அன் பிரதர்ஸ், டாக்டர் எஸ்.முனியசாமி, பாலமுருகன், திருச்செந்தில் முகன், கண்மணி ஸ்ரீ, விக்னேஷ்ராஜ், அமிர்தவர்ஷினி, விரிவுரையாளர் வெங்கடேஷ்வரன், நடத்துனர் ரவி, கென்னடி, கே.ஜி.எண்டர்பிரைசஸ், எம்.அருண் பிரசாத், ஆடிட்டர் கே.கார்த்திக், எஸ்.திவாகர் ஹரிஸ் சூப்பர் மார்க்கெட், எம்.ராஜபாண்டி,எம்.செந்தில், ஜி.பூமிநாதன், வி.முனியசாமி, மோஹித் காந்தி,பார்வதி விலாஸ் வெண்ணெய், நெய் ஸ்டோர், ஜெகன் மெட்டல்ஸ், சி.குருபிரசாத், உடையத்தேவர், சபரி ஆப்செட் முத்துராமலிங்கம் கவிதா, பாரதிநகர் கீர்த்தனா ஸ்டோர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.