வத்திராயிருப்பு: உலக நன்மைக்காக வத்திராயிருப்பில் நடந்த சமஸ்தான பூஜையில் கலந்து கொண்ட கர்நாடக வியாசராஜ சுவாமிகள் மடம் பீடாதிபதி ஸ்ரீவித்யா ஸ்ரீஷ தீர்த்த சுவாமிகள் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். கர்நாடக மாநிலத்தை ஆண்ட விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசராகவும், ஆஸ்தான குருநாதராகவும் விளங்கியவர் ஸ்ரீ வியாசராஜ சுவாமிகள். இவரது ஆன்மிக மடத்தின் தற்போதைய பீடாதிபதியாக இருப்பவர் ஸ்ரீவித்யா ஸ்ரீஷ தீர்த்த சுவாமிகள். உலகநன்மைக்காக வத்திராயிருப்பில் நடந்த சமஸ்தான பூஜையில் கலந்து கொள்ளவந்த இவர், ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலுக்கு பக்தர்களுடன் ஊர்வலமாக சென்றார். அங்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் வழிபாடு நடந்தது. உலக நன்மைக்காக நடந்த சமஸ்தான பூஜையில் பங்கேற்ற இவர், பக்தர்களுக்கு முத்ராதர்ணம் செய்தும், அருளாசிகள் வழங்கி பேசினார். பக்தர்களுக்கு மந்திராட்சதை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளைவத்திராயிருப்பு மத்வ சங்கத்தினர், பக்தர்கள் செய்தனர்.