பதிவு செய்த நாள்
28
டிச
2017
12:12
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு, 25 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. பள்ளிபாளையம், காவேரி கரையோரம், பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பரமபதம் சொர்க்க வாசல், அதிகாலையில் திறக்கப்படும். அன்று முழுவதும் பக்தர்களுக்கு லட்டு, அன்னதானம் வழங்கப்படும். இந்தாண்டு, நாளை, வைகுண்ட ஏகாதசி நடக்கிறது. இதற்காக, 25 ஆயிரம் லட்டு தயாரிக்கும் பணி, இரண்டு நாட்களாக இரவு பகலாக, நடந்து வருகிறது. இதற்கான பணியில், கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து, கோவில் நிர்வாகி சுரேஷ் கூறியதாவது: இதில், 1,000 லிட்டர் எண்ணெய்; நெய், 15 லிட்டர்; கடலை மாவு, 150 கிலோ; சர்க்கரை, 300 கிலோ; முந்திரி, 16 கிலோ; கற்கண்டு, ஐந்து கிலோ ஆகியவற்றை பயன்படுத்தி, 25 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளன. மொத்தம், 75 ஆயிரம் ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.