பதிவு செய்த நாள்
28
டிச
2017
01:12
ஈரோடு: தாராபுரம் அருகே நேற்று முன்தினம், பழநிக்கு பாதயாத்திரை சென்ற, திருப்பூர் ஐயப்ப பக்தர்கள் மீது, அரசு பஸ் மோதியது. இதில் ஆறு பேர் பலியாகினர். இந்நிலையில் ஈரோடு வழியாக, பாதயாத்திரை செல்லும், முருக பக்தர்களுக்கு, ஈரோடு எஸ்.பி., சிவகுமார், போக்குவரத்து பிரிவு டி.எஸ்.பி., சேகர் இணைந்து, ஈரோட்டில் நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். குறிப்பாக கருங்கல்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் குளித்து விட்டு, பழநிக்கு நடந்து சென்ற பக்தர்களின் கை, அவர்கள் பை, தொப்பி, சட்டை பின்புறம் என பல இடங்களில், ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டினர். மேலும், சாலையோரம் செல்லவும் அறிவுறுத்தினர். ரயில்வே ஸ்டேஷன், பழநி சாலை என பல பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், போக்குவரத்து போலீசார் இணைந்து, விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.