பதிவு செய்த நாள்
29
டிச
2017
12:12
திருப்பூர்: வைகுண்ட ஏகாதசி நாளான இன்று, திருப்பூர் பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
திருப்பூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. நேற்று, பகல் பத்து உற்சவத்தை தொடர்ந்து, எம்பெருமாள் மோகினி அலங்காரத்தில், ஸ்ரீ நாச்சியார் திருக்கோலத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது.இன்று அதிகாலை, 3:30க்கு, வேத மந்திரங்கள் முழங்க, வீரராக பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு எம்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பூர் திருப்பதியில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்து ஸ்ரீதேவி பூதேவி சமயதராய் பெருமாள் அருள்பாலித்தார்.