வடமதுரை, வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள ஐயப்பன் கோயிலில் 21ம் ஆண்டு மண்டல பூஜை நடந்தது. திருமஞ்சனம், அலங்காரம், அபிஷேக வழிபாடுகள், அன்னதானம் நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் ஐயப்பன் சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலம் நடந்தது. விழா ஏற்பாட்டினை கோயில் தலைவர் ஆர்.கே.பெருமாள், செயலாளர் சண்முகவேலு, தலைமை குருசாமி அழகர்சாமி செய்திருந்தனர். இதே போலகாணப்பாடி ஐயப்பன் கோயிலில் 29ம் ஆண்டு மண்டல பூஜை விழா நடந்தது. சிறப்பு பூஜை, அன்னதானம், குத்து விளக்கு பூஜை நடந்தது. ஏற்பாட்டினை கோயில் நிர்வாகிகள் நடராஜன், சுப்பையா மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.