பரமக்குடி, பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்வசத்தின் பத்தாவது நாளான நேற்று பெருமாள் மோகினி அவதாரத்தில் அருள்பாலித்தார். பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயில் பகல்பத்து உற்சவத்தில் பத்தாவது நாளான நேற்று மாலை 4:00 மணிக்கு பெருமாள் மோகினியாக ரதவீதியை வலம் வந்தார். தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு நடை சாற்றப்பட்டது. இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5:00 மணிக்கு பெருமாள் சர்வ அலங்காரங்களுடன் சொர்க்கவாசல் வழியாக வரவுள்ளார்.