பதிவு செய்த நாள்
30
டிச
2017
12:12
உடுமலை: கோவில்களில் நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில், கோவிந்தா என
பக்தர்கள் கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
மார்கழி மாதம் முழுவதுமே பெருமாளுக்கான சிறப்பு மாதமாக, அதிகாலை பூஜைகளுடன், சிறப்பு வழிபாடு நடக்கிறது. இம்மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசியாகவும், இந்நாளில், பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
டிச 29-லச, வைகுண்ட ஏகாதசியையொட்டி, உடுமலை, பெருமாள் கோவில்களில், அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுந்த தமரரும் முனிவரும் வியந்தனர் வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே, என்ற திருவாய்மொழிக்கேற்ப பக்தர்கள் பெருமா ளின் கடைக்கண் பார்வைக்கு காத்திருந்து, சொர்க்கவாசல் திறக்கும் சமயத்தில் கோவிந்தா கோஷம் எழுப்பி, வழிபட்டனர்.
பக்தர்கள், அனைவரும், சொர்க்க வாசல் வழியே நுழைந்து, பெருமாளை வணங்கிச் சென்றனர்.
பெரியகடை வீதி, நவநீத கிருஷ்ண சுவாமி கோவிலில், பூமீநீளா நாயகி சமேத சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.
பெரியபட்டி ஊராட்சி சீனிவாச அனுமந்த பெருமாள் கோவிலில் அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இரவு, 8:00 மணிக்கு திருவீதி உலா மற்றும் சிறப்பு சொற் பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
நெல்லுக்கடை வீதி, சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில், அதிகாலை, 4:30 மணிக்கு, பெருமா ளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை, 5:30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பூமீநீளா நாயகி சவுந்திரவல்லித்தாயார் சமேத சவுந்திரராஜப் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை, 11:30மணிக்கு, பெருமாள் திருவீதி உலா நடந்தது.
பிரசன்ன விநாயகர் கோவிலில், காலை, 5:00 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது. வைகுண்ட ஏகாதசியையொட்டி, நவநீத கிருஷ்ணன் கோவிலில், ராப்பத்து உற்சவம் துவங்கியது.