நெட்டப்பாக்கம் வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2017 12:12
நெட்டப்பாக்கம்: வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் இன்று (29ம் தேதி) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
நெட்டப்பாக்கம் அடுத்துள்ள வடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள, பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று 29ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
நிகழ்ச்சியையொட்டி, மூலவர் திருமலை திருவேங்கடமுடையான் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தொடர்ந்து சன்னதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.