பதிவு செய்த நாள்
30
டிச
2017
12:12
திருப்பூர் ;பக்தர்களின் "கோவிந்தா கோஷம் முழங்க, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, கருட
வாகனத்தில் எழுந்தருளிய நம் பெருமாள் பக்தர்களுக்கும் காட்சிஅளித்தார்.
திருப்பூர், ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், வைகுந்த ஏகாதசி விழா, கடந்த, 18ம் தேதி, திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. 19 முதல், பகல்பத்து உற்சவம்நடந்தது.
தினமும் காலை, திருப்பாவை, நாலாயிர திவ்ய பிரபந்தம் என, திருமொழி திருநாள் நடந்தது.
டிச 28-ல், நாச்சியார் திருக்கோலத்தில், மோகினி அலங்காரத்தில், பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடந்தது. அதிகாலை, 3:00
மணிக்கு, ஸ்ரீ வீரராகவப்பெருமாளுக்கு, வைஷ்ணவ வேத மந்திரங்கள் முழங்க, பால், தயிர், நெய், தேன், பன்னீர், மஞ்சள், பழங்கள் என பல்வேறு திரவியங்களில் திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், உற்சவர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள், கருட வாகனத்தில்
எழுந்தருளினார்.
கட்டுக்கடங்காத பக்தர்கள், கூட்ட நெரிசலையும் பொருட்படுத்தாமல், "வெங்கட்ரமண
கோவிந்தா... கோவிந்தா என ஓயாமல் ஒலிக்க, சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, நம்பெருமாள் பிரவேசித்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், ஆயிரக்கணக்கான பக்தர்கள், அதிகாலை நேரத்தில்,
நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை தரிசித்தனர்.
சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீ வாரி டிரஸ்ட் சார்பில், லட்டு பிரசாதமும், பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், கேஸரி பிரசாதமும் வழங்கப்பட்டது.மூலவர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள் மற்றும் கனகவல்லி தாயார், பூமி நீளா தேவி தாயார், நவரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நாள் முழுவதும் பக்தர்கள் திரண்டதால், பெருமாள் கோவில் வீதி, பழைய மார்க்கெட் வீதிக ளில், கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
டிச 29-ல், இரவு முதல் வைகுண்ட ஏகாதசி விழாவில், ராப்பத்து உற்சவம், திருவாய் மொழி திருநாள் துவங்கியது. வரும், 7ம் தேதி, ஆழ்வார் மோட்ஷம், 11ம் தேதி, கூடாரை வெல்லும் உற்சவம் மற்றும் சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.
2017ம் ஆண்டில், ஜன., 8ல் வைகுண்ட ஏகாதசி, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்த நிலை யில், ஆண்டின் இரண்டாவது முறையாக, நேற்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது, குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் திருப்பதி, ஸ்ரீ வேங்கச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவில், அதி காலை, சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து, ஸ்ரீ தேவி, பூதேவி சமேதரராக, எம்பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி,
சொர்க்க வாசல் வழியாக வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அவிநாசி அருகே மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. அதிகாலை, சுவாமிக்கு பல்வேறு திரவி யங்களில் திருமஞ்சனம் நடந்தது.
தொடர்ந்து, கருட சேவை, சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. தாளக்கரை லட்சுமி நரசிம்ம
பெருமாள், அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோவில்,
கருவலூர் ஸ்ரீ கருணாகர வெங்கட்ரமண பெருமாள் கோவில், பரஞ்சேர் வழி, வீரநாராயணப் பெருமாள் கோவில், காங்கயம் பிரசன்ன வெங்கடேச பெருமாள்,
கொடுவாய் விண்ணளந்த பெரிய பெருமாள், உள்ளிட்ட பெருமாள் கோவில்களில், பரமபத
வாசல் நேற்று திறக்கப்பட்டு, கருட சேவை நிகழ்ச்சி நடந்தது.
பல்லடத்தை அடுத்த குள்ளம்பாளையத்தில் பள்ளி கொண்ட பெருமாள் கோவிலில், வைகுண் ட ஏகாதசி விழா நடந்தது. அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, கருட வாக னத்தில் ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளினார்.
முன்னதாக, பெள்ளி கொண்ட பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.