பதிவு செய்த நாள்
30
டிச
2017
12:12
பல்லடம்:"பஞ்ச பூதங்களாக இறைவன் இருக்கிறார், என, பல்லடத்தில் நடைபெற்ற மார்கழி உற்சவ விழாவில், மனவளக்கலை பேராசிரியர் பேசினார்.சத்யசாய் சேவா சமிதி மற்றும் பல்லடம் பக்தர்கள் பேரவை சார்பில், மார்கழி உற்சவ விழா, பொங்காளியம்மன் கோவிலில் நடந்து வருகிறது. அதில், "கடவுள் எங்கே இருக்கிறார்? என்ற தலைப்பில், மனவளக்கலை மன்ற பேராசிரியர் மதன்குமார் சிறப்புரை ஆற்றினார்.
அவர் பேசியதாவது:கடவுள் என்பவர் இறை துகள்களாகவும், பஞ்ச பூதங்களின்வடிவமாகவும் இருக்கிறார். பேரறிவையும் ஆற்றலையும் உணர வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அனைத்திலும் அவர் உள்ளார் என்பதை உணர்த்தவே, நம் நாட்டில் பஞ்ச பூதங்களுக்கும் கோவில்கள் உருவானது. அவரே ஐந்தறிவு உயிரினங்களாகவும், ஆரறிவுள்ள நம்முள்ளும் இருக்கிறார்.
உலகிலுள்ள அனைத்து பொருட்களிலும் கடவுளை காண்பவர் எவரோ, அவருக்குள் நான்
இருப்பேன் என கிருஷ்ணர் கூறியுள்ளார். நாள் செய்யும் செயல்களை வைத்தே, கடவுளுடன் நமக்கு தொடர்பு ஏற்படுகிறது. தேவையற்றதை கழிப்பதற்காகவே, மனித பிறப்பு ஏற்பட்டது. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சத்ய சாய் பஜன் குழுவின் சார்பில், பஜனையும், அதை தொடர்ந்து சாதனை பூக்கள் குழுவின் கும்மியாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.