பதிவு செய்த நாள்
30
டிச
2017
01:12
கோவை: கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசி
விழா சிறப்பாக நடந்தது. கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டபடி, திரளான
பக்தர்கள்
பெருமாளை வழிபட்டனர்.அன்னூர், கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், நேற்று
அதிகாலை, 3:45 மணிக்கு அபிஷேக ஆராதனையும், 5:00 மணிக்கு, அலங்கார பூஜையும்
நடந்தது. காலை, 5:40மணிக்கு, கரிவரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக
சொர்க்க வாசல் எனப்படும்பரமபத வாசல் வழியாக சென்று அருள்பாலித்தார்.
பக்தர்கள் பெருமாளை சேவித்தபடி பக்தி கோஷம் எழுப்பினர். பின் சுவாமி திருவீதியுலா,
தர்மர் கோவில் வீதி, சத்தி ரோடு, மெயின்ரோடு வழியாக நடந்தது.
மொண்டிபாளையம், வெங்கடேசப்பெருமாள் கோவிலில் நேற்று காலை, 5:50 மணிக்கு,
சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வெங்கடேசப்பெருமாள், ஸ்ரீதேவி- பூதேவி சமேதராக,
பரமபத வாசல் வழியாக வந்து காட்சியளித்தார். பின் தேரோடும் வீதி வழியாக, சுவாமி
உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர்.
பொங்கலூரிலுள்ள
பழமையான வரதராஜப் பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை, 4:10 மணிக்கு,
திருமஞ்சனமும், அலங்கார பூஜையும் நடந்தன. 5:10 மணிக்கு
சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, வரதராஜப்பெருமாள் பரமபத வாசல் வழியே வந்து அருள் பாலித்தார். சுவாமி திருவீதியுலா நடந்தது.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் தென் திருமலை திருப்பதி வேங்கடேஸ்வர சுவாமி வாரி
கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று சொர்க்க வாசல்
திறக்கப்பட்டது.
வியாழக்கிழமை நள்ளிரவு, 12:30 மணிக்கு கோவில் நடை
திறந்து திருப்பள்ளி எழுச்சியும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. 1:30 முதல்
2:30 மணி வரை, மார்கழி மாத விசேஷ பூஜைகள் நடந்தன. இதையடுத்து, பூராபிஷேகம்
நடந்தது.
அதிகாலை, 5:20 மணிக்கு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் புறப்பாடு நடந்தது.
5:30
மணிக்கு வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது. அதன் வழியாக மலையப்ப சுவாமி வெளியே
வந்தார். அதன் பின் ஆழ்வார்களுக்கு மங்களா சாசனம் செய்யப்பட்டது.
பிறகு
மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி- பூதேவியுடன் அரங்க மண்டபத்தில் எழுந்தருளி
பக்தர் களுக்கு அருள் பாலித்தார். சொர்க்க வாசல் வழி முழுவதும், பூக்களால்
அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாலையில் சுவாமி திருவீதி உலாவும்,
மூன்றாம் கால பூஜையும்
நடந்தது. இதை தொடர்ந்து இரவு ராப்பத்து உற்சவம் துவங்கியது.
பெரியநாயக்கன்பாளையம்:
வைகுண்ட ஏகாதசியையொட்டி துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில்
வைணவ திருத்தலங்களில் உள்ள பரமபத வாசல்களில் அருள்மிகு பெருமாள், தாயார்க ளுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியநாயக்கன்பாளையம் அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் கோவிலில், அதிகாலை
திருமஞ்சனத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக துவங்கியது.
கரிவரதராஜ பெருமாள் சேஷ வாகனத்தில், ரங்க மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு
அருள்பாலித்தார்.
காலை, 5:45 மணிக்கு பஜனை கோஷ்டியினருடன் சொர்க்கவாசல் வழியாக
பிரவேசித்தார். முக்கிய வீதிகள் வழியாக சேஷன் மற்றும் கருட வாகனத்தில் உலா
வந்தார்.
திருவீதியுலாவின் போது, ஆண்டாள் மற்றும் பாகவத கோஷ்டியினர் திருப்பாவையின், 30
பாடல்களையும்
பாடிச்சென்றனர். விழா நிறைவில், பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்க
ப்பட்டது. இதே பகுதியில் உள்ள, ஸ்ரீ உபயகலையார் ராமானுஜ கூடத்தில் மலர அலங்
காரத்தில் ஸ்ரீ ராமானுஜர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பாலமலை
அரங்கநாதர்கோவில், நாயக்கனூர் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், இடிகரை
பள்ளி கொண்ட ரங்கநாதர் கோவில், கோவிந்தநாயக்கன்பாளையம் கோதண்ட ராமசாமி
கோவில், அத்திப்பாளையம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், நாயக்கன்பாளையம்
பெருமாள் கோவில்.கோவனூர் சீனிவாச பெருமாள் கோவில், சின்னத்தடாகம் ஸ்ரீ
கரிவரதராஜ பெருமாள் கோவில், பாப்பநாயக்கன்பாளையம் நவநரசிம்மர் கோவில்,
அத்திப்பாளையம் சென்றாய பெருமாள் கோவில், நரசிம்மநாயக்கன்பாளையம் லட்சுமி
நரசிம்ம பெருமாள் கோவில்.
திருமலைநாயக்கன்பாளையம் ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட வைணவக்
கோவில்களில், வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
சூலூர்: வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி, சூலூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவேங்டநாத
பெருமாள் கோவிலில், சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் அதிகாலையில் நடந்தன.
அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சொர்க்கவாசல் வழியாக வந்த
பெருமாளை, பக்தர்கள் தரிசனம் செய்தனர். வெங்கிட்டாபுரம் காரண பெருமாள் கோவில்,
கலங்கல் பெருமாள் கோவில், கருமத்தம்பட்டி பெருமாள் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
சோமனூர்
சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, அம்மன் சிறப்பு
அலங்காரத்தில் அருள்பாலித்தார். அம்மன் அருகில் பெருமாள் பள்ளி
கொண்டிருக்கும் சிறப்பு அலங்காரத்தை, பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்தனர்.
சூலூர் திருப்பதி கோவிலில் நடந்த பூஜையில், ஏராளான பக்தர்கள் பங்கேற்று
வழிபட்டனர்.