பொள்ளாச்சியில் வைகுண்ட ஏகாதசி விழா பரமபத வாசல் திறப்பு:பெருமாள் கோவில்களில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2017 01:12
பொள்ளாச்சி;பொள்ளாச்சியிலுள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி திதியை வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடுவது வழக்கம். அன்று, பெருமாள் பள்ளி கொண்டுள்ள பாற்கடல் வைகுண்டத்தின் சொர்க்க வாசல் திறக்கப்படுவதாக நம்பிக்கை உள்ளது. இதனால், வைகுண்ட ஏகாதசி வைணவ சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கும் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படும்.
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக கொண்டப்பட்டது. இரவு முழுக்க தூங்காமல் கண்விழித்து விரதமிருந்த பக்தர்கள், அதிகாலையில் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பை கண்டு களித்தனர். அப்போது, பரமபதவாசலை கடந்து வந்த பெருமாளை வணங்கினர்.
பொள்ளாச்சி கடைவீதி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் அதிகாலை, 4:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நடந்தது. பக்தர்கள் கொண்டு வந்திருந்த காய், கனிகள் உள்ளிட்ட திரவிய ங்களால் சொர்க்கவாசல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு, சொர்க்க வாசல் திறப்பு மற்றும் சுவாமி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.