விருதுநகர், பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30டிச 2017 01:12
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட பெருமள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி யொட்டி நடந்த சொர்க்கவாசல் திறப்புவிழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விருதுநகர் ரயில்வேபீடர்ரோடு ராமர் கோயிலில் சொர் க்கவாசல் திறப்பு காலை 5:00 மணிக்கு நடந்தது. காலை 8:00 மணிக்கு கருட வாகனத்தில் ராமர், சேஷ வாகனத்தில் ஸ்ரீனிவாசப்பெருமாள் வீதிஉலா நடந்தது. மாலை 6:00 மணிக்கு ஸ்ரீனிவாச ப்பெருமாள்-பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை விருதுநகர் கம்ம வடுகன் கல்வி கலாசார பொதுஅறக்கட்டளை செய்திருந்தது. இதுபோல் விருதுநகர் பேட்டை பெருமாள் கோயிலிலும் சொர்க்கவாசல் திறப்பு காலை 5:00 மணி நடந்தது. விருதுநகர் மற்றும் சுற்றுகிராமத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சாத்தூர்: சாத்தூர் வெங்கடாஜலபதி கோயிலில் காலை 6 :00மணிக்கு சயன பூஜையுடன் காலை 7:15 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட அதன் வழியாக சுவாமி எழுந்தருளினார்.
கோவிந்தா, கோபாலா என கோஷமிட்டு பக்தர்கள் வணங்கினர் விழா மண்டபத்தில் வீற்றி ருந்த சுவாமி பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அங்கு பஜனையுடன் பக்தர்கள் ஆடிப்பாடி பெருமாளை சேவித்தனர். 11 :00 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலையில் கருட வாகனத்தில் எழுந்தருளிய சுவாமி, நான்கு ரத வீதி வழியாக வலம் வந்து கோயிலை வந்த டைந்தார். இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழாக்கமிட்டியாளர்கள் ஏற்பாடு களை செய்திருந்தனர்.
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயிலில் அதிகாலையில் சேதுநாராயப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் திரும ஞ்சன வழிபாடு நடந்தது. தொடர்ந்து பெருமாள் சிவப்பு பட்டுடுத்தி கோயில் மையமண்ட பத்தில் அமைக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளினார். அவரை தொடர்ந்து தாயார்கள் எழுந்த ருளினர். சிறப்பு பூஜைகளுக்கு சுவாமிகள் சொர்க்கவாசல் வழியே வெளியே வந்தனர். பக்தர் கள் கோவிந்தா கோஷம் எழுப்பியும், பூக்களை தூவியும் வழிபட்டனர். பின்னர் பெருமாள் வீதியுலா
சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மீண்டும் கோயிலை வந்தடைந்த சுவாமியை பக்த ர்கள் எதிர்சேவை செய்து வரவேற்று மைய மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.