Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேனி: வைகுண்ட ஏகாதசியை ... தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவித்துறையில் வைகுண்ட ஏகாதசி 8 ஆண்டுக்கு பின் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2017
02:12

குருவித்துறை : குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் ராஜகோபுரம்
கட்டப்பட்டதை தொடர்ந்துஎட்டு ஆண்டுகளுக்கு பின்பு வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்தது.
சோழவந்தான் அருகேயுள்ள இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு  டிச. 29-ல், காலை 5:45 மணிக்கு நடந்தது. கோயில் ராஜகோபுரம் கட்டப்பட்டு கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது.

இதைதொடர்ந்து நேற்று காலை ராஜ அலங்காரத்தில் கருடாழ்வார் வாகனத்தில் ஊர்வலமாக கன்னியப்ப முதலியார் மண்டகப்படியில் சுவாமி எழுந்தருளினார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சக்கரையம்மாள், ஊழியர்கள் வெங்கடேசன், நாகராஜ் மற்றும் கிராம விழா குழுவினர் செய்திருந்தனர்.

சோழவந்தான்: ஜெனகை நாராயணப்பெருமாள் கோயிலில் டிச. 29-ல்,  காலை 5:00 மணிக்கு ரகுராம்பட்டர்தலைமையில் அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் காலை 5:46 மணிக்கு சொர்க்கவாசலில் எழுந்தருள பக்தர்கள் தரிசித்தனர். கோயில் நிர்வாக அதிகாரி லதா, கணக்கர் பூபதி, ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலஸ்தானத்தில் பவளக் கனிவாய்
பெருமாள் எழுந்தருளியுள்ளதால், வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு கம்பத்தடி
மண்டபத்திலிருந்து மடப்பள்ளி மண்டபம் செல்லும் வழியிலுள்ள சொர்க்கவாசல் திறக் கப்பட்டு பெருமாள் எழுந்தருளினார்.

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில்அதிகாலை மூலவர்கள் ஸ்ரீதேவி, பூமா தேவி ஸ்ரீநிவாச பெருமாளுக்கு சிறப்பு புஷ்ப அலங்காரமாகி விஸ்வரூப தரிசனம் நடந்தது. அதிகாலை5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. சயனகோலத்தில்  உற்சவர் பெருமாள் அருள் பாலித்தார். இரவு  கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.திருநகர் மகாலட்சுமி காலனி பிரசன்ன வரதராஜப் பெருமாள் கோயிலில் காலையில் பெருமாளுக்கு சயன கோல அலங்காரமானது. இரவு 7:00 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு சுவாமி புறப்பாடு நடந்தது.

பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் காலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
உற்சவருக்கு சயன கோல அலங்காரமும், மூலவர்கள் லட்சுமி நாராயணருக்கு புஷ்பாங்கி
அலங்காரமானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar