பதிவு செய்த நாள்
30
டிச
2017
04:12
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பேட்ராய சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு, 20 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டது.
* கெலமங்கலம் சென்ன கேசவ சுவாமி கோவில், தளி வேணுகோபால சுவாமி கோவில், ராயக் கோட்டை லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோவில், மதகொண்டப்பள்ளி வேணு கோபால சுவாமி கோவில், ஓசூர் மலை மீதுள்ள பெருமாள் கோவில், சூளகிரி வரதராஜ பெருமாள் மகா லட்சுமி கோவில், கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில், தாசனபுரம் வெங்கடாஜலபதி கோவில், அத்திமுகம் நரசிம்ம சுவாமி கோவில், சப்படி பெருமாள் கோவில்களில் சொர்க் கவாசல் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.
மேலும் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள, ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
* தர்மபுரி, கோட்டை பரவாசுதேவர் கோவிலில் அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோட்டை பரவாசுதேவர் கோவில் சொர்க்கவாசல் வழியாக வந்த பரவாசுதேவர், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* நல்லம்பள்ளி அடுத்த, லளிகம் பெருமாள் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண
சுவாமி கோவில், செட்டிக்கரை சென்றாய பெருமாள் கோவில், ஆட்டுக்காரன்பட்டி ராதா கிருஷ்ணா பிருந்தாவனம், அதகபாடி பெருமாள் கோவில், அதியமான்கோட்டை பெருமாள் கோவில் உள்பட, மாவட்டத்தின் பல்வேறு பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
* கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை வடக்கு மாட வீதியில் உள்ள, ஸ்ரீநவநீத வேணுகோபால சுவாமி கோவிலில், சொர்க்க வாசல் திறப்பை முன்னிட்டு, அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. 4:15 மணிக்கு பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வந்தார். பக்தர்கள் கோவிந்தா; கோவிந்தா என்று கோஷங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து, ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் நவநீத கோபால சுவாமி, கோவிலை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
* பாப்பாரப்பட்டி, வேணு கோபால சுவாமி கோவில், பழையபேட்டை ஸ்ரீலட்சுமி நாராயண
சுவாமி கோவில், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோவில், போச்சம்பள்ளி அடுத்த சென்றாயமலை சென்றாய பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறப்பு நடந்தது.
* சூளகிரி வரதராஜ பெருமாள் கோவில், கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில், ஓசூர்
பெருமாள் கோவில், தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில் என மாவட்டம்
முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க
வாசல் திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.