பதிவு செய்த நாள்
30
டிச
2017
02:12
தேனி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தேனி அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி துவங்கியது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 6:00 மணிக்கு தேனி அபிநயா நாட்டிய பள்ளியின் நடன நிகழ்ச்சி நடந்தது. பின், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன.
இரவு 8:00 மணிக்கு ரெங்கநாதன் சுவாமியின் வீடு செய்மீனே, என்ற தலைப்பில் சொற்பொழிவு , இரவு 9:00 மணிக்கு சரணாகதி என்ற தலைப்பில் ரெங்கராமானுஜ சுவாமியின் சொற்பொழிவு, இரவு 10:00 மணிக்கு திண்டுக்கல் தோப்புசுவாமி விளாஞ்சோலைப் பிள்ளையின் மீட்சியில்லா நாடு என்ற தலைப்பில் சொற்பொழிவு நடந்தது.
பின் நள்ளிரவு 11:00 மணிக்கு போடி ஸ்ரீபாரத கான சங்கீத சபாவின் பஜனை நடந்தது.
* என்.ஆர்.டி., நகரில் உள்ள கணேச கந்த பெருமாள் கோயிலில் அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி தெற்கு பிரகார வாயிலில் நடந்தது.
பரமபத வாசல் வழியே வந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்திரராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரத்தை அர்ச்சகர் ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், நாராயணன் செய்திருந்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவின் டாக்டர் ராஜ்குமார், என்.ஆர்.டி., பார்த்திபன் செய்தனர். தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
* கோவிந்தநகரம் பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் சுப்ரபாதம்திருப்பாவை பூஜை, மூலவர் வரதராஜப்பெருமாளுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சொர்க்கவாசலில் உற்ஸவர் நம்பெருமாள் அலங்காரத்தில் தாயார்களுடன் காட்சியளித்தார். ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன் , பக்தர்கள் செய் தனர்.
* நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் திருப்பள்ளி எழுச்சி,சுவாமி புறப்பாடு ஹரே ராம அகண்ட நாமகீர்த்தனம், கிருஷ்ணர், ராதைக்கு திருமஞ்சனம், சுவாமி புறப்பாடு,
சத்சங்கம் மற்றும் இரவு முழுவதும் அகண்ட நாமகீர்த்தனம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், பக்தர்கள்
செய்திருந்தனர்.
போடி: போடி சீனிவாசப்பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாள் ஸ்ரீரங்கத்தில் இருப்பது போல, நவரத்தினங்களால் ஆன ரத்தின அங்கி சேவைக்கான அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மூலவர் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை தக்கார் பாலகிருஷ்ணன், அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்த னர்.
ஆண்டிபட்டி: ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறக் கப்பட்டது.
சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியருடன் சொர்க்கவாசல் வழியாக வந்து நம்மாழ்வாருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. வடக்கு வாசல் பகுதியில் இருந்த மண்டபத்தில் அமர்ந்த சுவா மிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பக்தர்கள் வழிபட் டனர். அன்னதானம் நடந்தது.
தேவதானப்பட்டி: ஜெயமங்கலம் வராகநதிக்கரையில் பழமையான வெங்கடேசபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ,ஆராதனை நடந்தது.
பின்னர் வெங்கடேச பெருமாள் தாயாருடன் கிராமத்தின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமானோர் தரிசித்தனர்.