பதிவு செய்த நாள்
01
ஜன
2018
12:01
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தேவாலயங்கள், கோவில்களாக மாறி வருகின்றன. அமெரிக்காவில், டெலாவர் மாகாணத்தில் உள்ள, பேயர் நகரில் வசிக்கும் பக்தர்களுக்கு, சூரியநாராயண சுவாமிகளை வழிபட, கோவில் இல்லாமல் இருந்தது. இது போல், அருகில் உள்ள பென்சில்வேனியா, மேரிலாண்டு மாகாணங்களில் வசிக்கும் பக்தர்களுக்கும், சூரியநாராயணன் கோவில் இல்லாதது பெரும் குறையாக இருந்தது.அவர்கள், சுவாமியை தரிசிக்க, பல நுாறு கி.மீ., பயணம் செய்து, நியூ ஜெர்சியில் உள்ள கோவிலுக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்நிலையில், குஜராத் மாநிலம், மணி நகரில் இருந்து, ’சூரியநாராயணன் கடி சன்ஸ்தான்’ அமைப்பின் குரு, புருஷோத்தம் பிரியதாஸ், சில ஆண்டுகளுக்கு முன், டெலாவர் சென்றார். அங்கு, சூரியநாராயணன் சுவாமிக்கு கோவில் கட்ட அறிவுறுத்தினார்.இதைத்தொடர்ந்து, வாசு படேல் உள்ளிட்ட,பேவர் நகரத்தில் வசிக்கும் இந்தியர்கள், கோவில் கட்ட இடம் தேடினர். அதன் முடிவில், மென்னோனைட் என்ற தேவாலயம் விலைக்கு வந்தது.
அதை, 2014ல், ’சன்ஸ்தான்’ அமைப்பினர் வாங்கி, கோவிலாக மாற்றும் பணியை துவக்கினர். அதற்கான கோபுரங்கள், இந்தியாவில் இருந்து பெறப்பட்டன.பின், 3,000 சதுர அடி பரப்புடைய அந்த தேவாலயத்தில், கூட்ட அரங்கு, சமையல் அறை உள்ளிட்ட பல அறைகள் உள்ளன. அதை, 9.15 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டு, தற்போது, கோவிலாக மாற்றி உள்ளனர். அங்கு, சூரிய நாராயணன் சுவாமி உள்ளிட்டசிலைகள், நவம்பரில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த கோவில், மத அடையாளமாக இல்லாமல், கலாசார அடையாளமாக விளங்கும் என்பதால், அனைவருக்கும் அனுமதி உண்டு என, அறிவிக்கப் பட்டுள்ளது. அதனால், அங்கு ஏராளமானோர் வந்து செல் கின்றனர். இது, அமெரிக்காவில் கோவிலாக உருமாறிய, மூன்றாவது தேவாலயம். டெலாவரில் மட்டுமின்றி, கலிபோர்னியா, கென்டக்கி போன்ற மாகாணங் களிலும், இதுபோல், இரு தேவாலயங்கள், கோவில்களாக மாற்றப்பட்டு உள்ளன. பிரிட்டன் நாட்டின் லண்டன் மற்றும் மான்செஸ்டர் அருகில் உள்ள பால்டன் ஆகிய இடங்களிலும், தேவாலயங்கள், சூரிய நாராயணர் கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன. கனடா மற்றும் அமெரிக்காவிலும், கோவில் களை கட்ட, மேலும் சில இடங்களை, ’சன்ஸ்தன்’ அமைப்பு வாங்கி உள்ளது. - நமது நிருபர் -