பதிவு செய்த நாள்
01
ஜன
2018
10:01
திருப்பதி: வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி என இரு நாட்களும், இரண்டு லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, வைகுண்ட ஏகாதசி அன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருவது வழக்கம். அவர்கள், 32 மணிநேரம் காத்திருப்பு அறைகளில் காத்திருந்தனர். வைகுண்ட ஏகாதசியன்று காலை, 8 மணி முதல் பக்தர்கள் தர்ம தரிசனத்தில் அனுமதிக்கப்பட்டனர். தேவஸ்தான வரலாற்றில், இதுவரை இல்லாத பதிவாக, வைகுண்ட ஏகாதசியான, கடந்த, 29ல் மட்டும், ஒரு லட்சம் பக்தர்களும்; மறுநாள் துவாதசியான சனிக்கிழமை அன்று, 1.01 லட்சம் பக்தர்களும், ஏழுமலையானை தரிசித்துள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.