காங்கேயம்: காங்கேயம் காசி விஸ்வநாதர் கோவிலில், ஐயப்ப பக்தர்கள் சார்பில், 108 வலம்புரி சங்காபிஷேக விழா நடந்தது.காங்கேயம் காசிவிஸ்வநாதர் கோவிலில், ஐயப்ப பக்தர்கள் சங்கத்தின் சார்பில், 51ம் ஆண்டு விழா நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை 6 மணிக்கு ஐப்பனுக்கு வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. மகா தீபாராதனை, சிறப்பு அலங்காரம் நடந்தது. வரும் 28ல் அதிகாலை 4 மணிக்கு கணபதிஹோமம், 6 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. 29ல் காலை 6 முதல் 9 வரையும், மாலை 6 முதல் இரவு 9 வரையும் லட்சார்ச்சனை, தீபாராதனை நடக்கிறது. 31ம் தேதி மாலை 5 மணிக்கு தர்மசாஸ்தா ஊர்வலம் நடக்கிறது. ஜனவரி 1ம் தேதி, பகல் 11 மணிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.