பதிவு செய்த நாள்
19
டிச
2011
12:12
உடுமலை : உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், சனிப்பெயர்ச்சியையொட்டி, லட்சத்தி எட்டு எள்ளு தீபம் மற்றும் மகா யாகம் வரும் 21ம் தேதி நடைபெறுகிறது. சனிபகவான் வரும் 21ம் தேதி கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியடைவதையொட்டி, உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட் சக்தி விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வரும் 20ம் தேதி காலை 9.15 மணிக்கு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், புண்ணியவாசகம், சிறப்பு அபிஷேகம், வெள்ளி கலச அலங்காரம் நடைபெறுகிறது. காலை 10.00 மணிக்கு லட்சார்ச்சனை ஆரம்பம், காலை 10.00 மணிமுதல் 2.00 மணி வரை 3 ஆவர்த்திகளும், மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை 2 ஆவர்த்திகளும் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆவர்த்திகளில், 10 ஆயிரம் எள்ளு தீபங்கள் வீதம் ஐந்து முறை ஏற்றப்படும். வரும் 21ம் தேதி காலை 6.00 மணிக்கு சனிபகவானுக்கு சிறப்பு யாகம், 7.00 மணிக்கு பூர்ணாகுதி, காலை 7.15 மணிக்கு நவக்கிரகங்களுக்கு அபிஷேகம், காலை 8.00 மணிக்கு அலங்கார பூஜை, காலை 9.00 மணிமுதல் சனிப்பெயர்ச்சி சிரம நிவர்த்த வேண்டி குடும்ப யாகம் நடைபெறுகிறது.
காசிவிஸ்வநாதர் கோவில்: மடத்துக்குளம் அருகேயுள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. மடத்துக்குளம் அருகே கொமரலிங்கத்தில் காசிவிசுவநாதர் கோவில் உள்ளது. பல நூறு ஆண்டு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பல்வேறு பரிகார பூஜைகள் நடத்துவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இங்கு திருநள்ளாறு தலம் போல் கிழக்கு திசை பார்த்து சனிப்பகவான் உள்ளது கூடுதல் சிறப்பு.இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி விழா வரும் 21 ந்தேதி காலை முதல் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சனி திசை நடக்கும் பக்தர்கள் சிறப்பு பூஜையில் பங்கேற்கலாம்.