பதிவு செய்த நாள்
19
டிச
2011
12:12
பெருந்துறை: பெருந்துறை ஸ்ரீகோட்டை வீர ஆஞ்சயேர் கோயிலில் டிசம்பர் 24ம் தேதி ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நடக்கிறது.விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு திருமஞ்சனம், காலை 6 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 3 மணிக்கு அனுக்ஜை, விக்னேஷ்வர பூஜை, மஹா சங்கல்ப்பம், கலச பூஜை, மாலை 4 மணிக்கு ஸ்ரீமஹா ஹமனுமந்த் ஹோமம், திரவியாகுதி, மஹா பூர்ணுஹுதி, மாலை 6 மணிக்கு ஸ்ரீராமர் பட்டாபிஷேகம், இரவு 7 மணிக்கு வடமலை சாற்றுதல், மஹா அலங்கார தீபாராதனை, இரவு 9 மணிக்கு பஜனை மற்றும் பந்தசேர்வை துவக்கம். இரவு 12 மணிக்கு மஹா தீபாராதனை நடக்கிறது.ஏற்படுகளை பாலகிருஷ்ணன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.