பதிவு செய்த நாள்
02
ஜன
2018
12:01
பழநி, : முன்னிட்டு, பழநிமலைக் கோயிலில் நேற்று அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் 5 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநிமுருகன் கோயிலுக்கு தைப்பூசவிழா பாதயாத்திரை, சபரிமலை பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. நேற்று ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பையொட்டி மலைக்கோயில், திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்து விநாயகர் கோயில்களில் அதிகாலை நான்கு மணிக்கு நடை திறக்கப்பட்டது.சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை நடந்தது. உள்ளூர்,வெளியூர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அலகு குத்தியும், காவடி, பால்குடங்கள் எடுத்து அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோயில் சென்றனர். பொதுதரிசனம் வழியில் ஐந்து மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இதே போல இரவு தங்கரத புறப்பாட்டை காணவும் பக்தர்கள் திரண்டனர்.
பக்தர்கள் அவதி: ஆக்கிரமிப்பு தள்ளுவண்டி கடைகள் வியாபாரிகளால் பாதவிநாயகர் கோயில், சன்னதிவீதி, வடக்குகிரி வீதியில் வியாபாரிகளின் தொந்தரவால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். கிரிவீதிகள், அருள்ஜோதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, குளத்துரோடு, பூங்காரோடு மற்றும் திருஆவினன்குடி கோயில் அருகே இருபுறங்களிலும் முறையில்லாமல் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. போதியளவில் போலீசார் இல்லாததால் பக்தர்கள் கூட்டநெரிசலில் சிரமப்பட்டனர்.