சேலம்: சேலம், அழகிரிநாத சுவாமி ராப்பத்து உற்சவத்தையொட்டி, நேற்று வாமனர் அவதாரத்தில் அருள்பாலித்தார். சேலம், கோட்டையில் அழகிரிநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு டிச., 18 ல் துவங்கி வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும், சிறப்பு அலங்காரத்தில் அழகிரிநாத சுவாமி காட்சியளித்து வருகிறார். ராப்பத்து உற்சவத்தின், நான்காம் நாளான நேற்று, வாமனர் அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.