பதிவு செய்த நாள்
02
ஜன
2018
01:01
செய்யாறு: செய்யாறு திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் விழா, இரண்டு நாட்கள் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாசகம் பாடினர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், திருவோத்தூர் பகுதியில், பாடல் பெற்ற ஸ்தலமான வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, கடந்த, இரண்டு நாட்களாக, திருக்கழுகுன்றம் கயிலை புனிதர் தாமோதரன் தலைமையில், திருவாசகம் முற்றோதல் விழா நடந்தது. இதை முன்னிட்டு, சதாசிவ பரப்பிரம்ம சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் சிவனடியார்கள் பங்கேற்று, சிவ வாத்திய இசை முழயங்கியவாறு, திருவீதி உலா வந்தனர். தொடர்ந்து, வேதபுரீஸ்வரர் கோவில் வளாகத்தில் திருவாசகம் முற்றோதல் விழா நடந்தது. இதில், திருவோத்தூர், கோசைநகரான், ஆரணி, அனக்காவூர், அசனமாப்பேட்டை, திருவலம், புளியங்கண்ணு, பொதட்டூர்பேட்டை மற்றும் தேவிகாபுரம் பகுதிகளை சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருவாசகம் பாடல்களை முழுவதும் பாடி, சுவாமி தரிசனம் செய்தனர்.