Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவகாமியம்மன் கோயில் தெப்ப உற்ஸவம் ... சென்னையில் ஒரு திருக்கயிலை: நவ நடராஜர்கள் சந்திப்பு சென்னையில் ஒரு திருக்கயிலை: நவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவருளை காட்டிலும், குருவருளே உயர்ந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2018
02:01

பல்லடம் :“திருவருளை காட்டிலும், குருவருளே மிகவும் உயர்ந் தது,” என, பல்லடத்தில் நடை பெற்ற மார்கழி உற்சவ விழாவில், சிவாச்சல அடிகளார் பேசினார். சத்யசாய் சேவா சமிதியுடன், பல்லடம் ஆன் மிக பேரவை இணைந்து, பொங்காளியம்மன் கோவிலில், மார்கழி உற்சவ பெருவிழாவை நடத்தி வருகிறது. தினசரி பஜனை, சொற்பொழிவு, மற்றும் கலை நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு, வரன்பாளை யம் சிவாச்சல அடிகளார் ‘இன்பத்துறையில் எளியர் ஆனார்’ எனும் தலைப்பில் பேசியதாவது:சொற்பொழிவு என்பது கடினமான கலை. அரட்டை அடிப்பது என்பது வேறு. கேட்பவர்களின் நேரத்தை வீணடிக்காமல், உபயோகமான கருத்துக்களை கூறுவதே சொற்பொழிவு. அது வெறும் நகைச்சுவையாகி விடக்கூடாது. பயனற்ற சொற்களை பேசுபவர்கள், மனித உருவம் கொண்டிருந்தாலும், அவர்கள் மனிதர் அல்ல. திருவருளை விட குருவருளே சிறந்ததாகும். அடியார்கள் வரலாற்றை சொல்வது பெரியபுராணம். அரிய சொற்களை சொல்பவர்களையே பெரியவர் என்பர். அவ்வாறு அடியவர்களாகிய, பெரியவர்களால் உருவானதே பெரியபுராணம் எனப்படுகிறது. இறை வன் மீது பற்று இருந்தால், கெட்ட செயல்கள் அனைத்தும் மறைந்துவிடும். இவ் வாறு அவர் பேசினார். முன்னதாக சத்யசாய் பஜனை நிகழ்ச்சியும், இடுவாய் ஆறுமுகம் காவடி குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. விழாவில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை; ஆனி மாதம் மூன்றாவது செவ்வாய் கிழமை மற்றும் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
ராஜபாளையம்; ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயில் ஆனிப்பெருந் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பூர்; நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று உழவாரப்பணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar