பதிவு செய்த நாள்
03
ஜன
2018
12:01
தர்மபுரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது. அதிகாலை, 3:45 மணிக்கு திருசிற்றம்பல சபையில், நடராஜருக்கு, 16 வகையான மூலிகை பொடிகளால் அபி?ஷகம் நடந்தது. காலை, 7:30 மணிக்கு, திட்டிவாசலில், நடராஜர், தம்பதி சமேதராக பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு களி பிரசாதம் வழங்கப்பட்டது.
* இதேபோல், தர்மபுரி நெசவாளர் நகர் மகாலிங்கேஸ்வரர் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனமர் மருதவானேஸ்வரர் கோவில், பாரதிபுரம் காசி விஸ்வநாதர் கோவில், தர்மபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள சிவன் கோவில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில், காரிமங்கலம் அருணேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர், பாலக்கோடு பால்வண்ணநாதர் சுவாமி கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில், நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது.
கிருஷ்ணகிரியில், பழையபேட்டை கவீஸ்வரன் கோவில், ஈஸ்வரன் கோவில், புதுப்பேட்டை சந்திரமவுலீஸ்வரர் கோவில், டி.பி.,ரோடு திருநாவுக்கரசர் மடம் உட்பட அனைத்து சிவன் கோவில்களிலும், அதிகாலை சுவாமிக்கு அபி?ஷகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தன. ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.