பதிவு செய்த நாள்
03
ஜன
2018
02:01
திருவண்ணாமலை: தண்டராம்பட்டு அருகே, 27 அடி உயர மணிகண்டன் சுவாமி கோவிலை, 16 கிராம மக்கள் தத்தெடுத்து, ஜோதி தரிசன விழா நடத்தினர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த க.உண்ணாமுலைபாளையம் கிராமத்தில் உள்ள ஆதி அய்யப்பன் கோவில் வளாகத்தில், 27 அடி உயர மணிகண்டன் சுவாமி சிலை கடந்த ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கோவிலை, பள்ளிசந்தல், தென் அரசம்பட்டு, வடமாமந்தூர், புஷ்பகிரி, தென்முடியனூர், ஆற்கவாடி, செட்டிக்குளம், சீர்ப்பனந்தல், பகண்டை, நாகல்குடி, வி.பாளையம், செங்கம் புதூர், க.உண்ணாமுலைபாளையம், சதாகுப்பம், உள்ளிட்ட 16 கிராம மக்கள் தத்தெடுத்து, 29ஆம் ஆண்டு ஜோதி தரிசன விழா நடத்தினர். இதை முன்னிட்டு, கோவிலில் உள்ள ஆதி அய்யப்பன் சிலை, கோவில் வளாகத்தில் உள்ள, 27 அடி உயர மணிகண்டன் சுவாமி சிலை, 18 சித்தர்கள் சிலை, விநாயகர், முருகன், சிவன், பராசக்தி அம்மன், ஆகிய சிலைகளுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, அரிபுத்திர சுவாமி தலைமையில், 29ம் ஆண்டு, ஜோதி தரிசன விழா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.