பதிவு செய்த நாள்
04
ஜன
2018
11:01
காஞ்சிபுரம் : செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், திருவாதிரை விழா, நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிபுரம், செவிலிமேடு பகுதியில் உள்ள ராமானுஜர் கோவிலில், திருவாதிரை விழா, நேற்று விமரிசையாக நடந்தது. காலை, 10:00 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து, பல இடங்களில் இருந்து சென்ற பக்தர்கள், 108 அந்தாதி பாடல்கள் பாடினர். மூலவருக்கு மலர் அலங்காரம் முடிந்து, பகல், 11:30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. இந்த ஆண்டின் முதல் திருவாதிரையும், 1001ம் ஆண்டு ராமானுனர் துவக்க விழாவும் நடைபெற்றதால், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.