Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாதயாத்திரை சுகாதாரம் காக்க ஆயிரம் ... மாரியம்மன் தேர்த்திருவிழா மார்ச் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஜெகநாதர் கோவில் தேர் ஊர்வலம்! 6ம் தேதி போக்குவரத்து மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2018
01:01

கோவை:ஜெகநாதர் கோவில் தேர் ஊர்வலத்தை முன்னிட்டு வரும், 6ம் தேதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை, ஜெகநாதர் கோவில், 26ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வரும், 6ம் தேதி மதியம் தேரோட்டம் நடக்க உள்ளது. இதையடுத்து, 6ம் தேதி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்திலிருந்து உக்கடம் செல்லும் அனைத்து வாகனங்களும் மரக்கடை, என்.எச்., ரோடு, டவுன்ஹால் வழியாக உக்கடத்தை அடைந்து, செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் உக்கடத்தை அடைந்து நேராக ஒப்பணக்கார வீதிக்குள் செல்லாமல், வாலாங்குளம் பைபாஸ் வழியாக சுங்கம் அல்லது பேரூர் பைபாஸ் வழியாக செல்ல வேண்டும். மேட்டுப்பாளையம் ரோடு, சுக்கரவார்பேட்டை, பூமார்க்கெட் மற்றும் புரூக்பாண்ட் ரோட்டிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பழைய மேம்பாலம் வழியாக மரக்கடை, என்.எச்., ரோடு வழியாக உக்கடம் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

பொள்ளாச்சி ரோட்டிலிருந்து திருச்சி மற்றும் காந்திபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் பைபாஸ் வழியாக கிளாசிக் டவர் சந்திப்பு மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளுக்கு செல்லலாம். தடாகம் ரோட்டிலிருந்து பாலக்காடு செல்லும் அனைத்து வாகனங்களும் பொன்னையராஜபுரம், சொக்கம்புதுார், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பேரூர் பைபாஸ் ரோடு வழியாக உக்கடம் செல்ல வேண்டும். பேரூர் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், சிவாலயா தியேட்டர் சந்திப்பு, சொக்கம்புதுார், பொன்னையராஜபுரம், தடாகம் ரோடு வழியாக காந்திபார்க் அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை நகருக்குள் நுழைய லாரிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று தேரோட்டம் நடக்கும் ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, ஆர்.ஜி., வீதி, வைசியாள் வீதி, கே.ஜி., வீதிகளில் உள்ள அனைத்து கடை உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களை தேர் வரும் ரோட்டில் நிறுத்தாமல் மாற்று இடத்தில் நிறுத்த அறிவுறுத்தப்படுகிறது. பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த தற்காலிக போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar