பதிவு செய்த நாள்
04
ஜன
2018
01:01
ஈரோடு: ஆருத்ர தரிசன விழா, சந்திரசேகரர் புறப்பாடு, மஞ்சள் நீராட்டுடன் நிறைவடைந்தது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ர தரிசன விழா, டிச., 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கி, மாணிக்கவாசகர் புறப்பாடும், ஜன., 2ல், ஆருத்தர தரிசனமும் நடந்தது இதில், நடராஜருக்கு, அபி?ஷகம், அலங்காரம், தீபாராதனை, நடராஜர் திருவீதியுலா நடந்தது. நிறைவு நாளான நேற்று, மஞ்சள் நீராட்டு, சுவாமி சந்திரசேகர், சாரதாம்பாள் புறப்பாடும் நடந்தது. சப்பரத்தில் எழுந்தருளிய சந்திரசேகரர், சாரதாம்பாள், ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, அக்ரஹார வீதி, காரைவாய்க்கால் வரை சென்று, கச்சேரி வீதி, பி.எஸ்., பார்க் மாரியம்மன் கோவில், தெப்பக்குளம் வீதி வழியாக நகர்வலம் வந்தார். வழி நெடுகிலும், நின்ற பக்தர்கள் ஒருவர் மீது, ஒருவர் மஞ்சள் நீரை தெளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். கடந்த பத்து நாட்களாக நடந்த விழா நேற்று நிறைவு பெற்றது.