பவானி: பவானி, காளிங்கராயன்பாளையம், பாரதி நகர், அருள் அரசி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா நடந்தது. அருள் அரசி மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம், 26ல், பூச்சாட்டப்பட்டு பொங்கல் விழா துவங்கியது. நேற்று முன்தினம், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்த நிலையில், நேற்று காலை பொங்கல் விழா நடந்தது. பின்னர் மாவிளக்கு ஊர்வலம், அக்னி கரகம் எடுத்தல், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள், சுவாமி வழிபாடு செய்தனர்.