சென்னிமலை: சென்னிமலை அருகே, சில்லாங்காட்டுவலசில் உள்ள, மாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த, 19ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா, நேற்று காலை நடந்தது. அப்போது சில்லாங்காட்டுவலசு, வெப்பிலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள், அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு கும்பம் எடுத்து கிணற்றில் விடும் நிகழ்ச்சி நடந்தது.