பதிவு செய்த நாள்
04
ஜன
2018
02:01
ஈரோடு: குப்பியண்ணசுவாமி கோவிலில் திருவிழா உண்டியலில், இரண்டு லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டம், 60 வேலம்பாளையம் கிராமம் துக்காச்சியில், ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகத்துக்கு உட்பட்ட குப்பியண்ணசுவாமி, செல்வகுமாரசுவாமி கோவில் உள்ளது. கோவிலில் பொங்கல் திருவிழா, டிச., 22ல் தொடங்கியது, 31ல் பொங்கல், ஜன., 1ல் மறு பூஜையுடன் நிறைவடைந்தது. விழாவை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்ட, மூன்று உண்டியல்கள் நேற்று முன்தினம் மாலை, திறந்து எண்ணிக்கை செய்யப்பட்டது. அதில், இரண்டு லட்சத்து, 1,325 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். உண்டியல் எண்ணிக்கையில், கோவில் செயல் அலுவலர் கங்காதரன், அறநிலையத்துறை ஆய்வாளர் பாலசுந்தரி, ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.