பதிவு செய்த நாள்
04
ஜன
2018
02:01
ப.வேலூர்: ஆனங்கூர், பகவதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. ப.வேலூர் அடுத்த, ஆனங்கூர் பகவதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த, 30ல் சுற்றுவட்டார பக்தர்கள், காவிரி ஆறு சென்று புனித நீராடி, ஊர்வலமாக எடுத்து வந்த தீர்த்தத்தை கொண்டு, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், பூச்சாட்டுதல் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, காவிரிக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி, தீ மிதித்து நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். நேற்று மாலை, பெண்கள், பொங்கல், மாவிளக்கு படையல் வைத்து அபிஷேகம் செய்தனர். இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. சுற்று வட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாலை, மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.