பதிவு செய்த நாள்
04
ஜன
2018
02:01
குமாரபாளையம்: சவுண்டம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் அமைக்கப்பட்டது. குமாரபாளையம், சவுண்டம்மன் கோவில், திருவிழாவின் முதல் நிகழ்வான முகூர்த்தக்கால் நடும் விழா, நேற்று காலை, 6:00 மணிக்கு கோவில் முன் நடந்தது. சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. விழாக்குழு தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். முகூர்த்தக்கால் கம்பத்திற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அதற்கென அமைக்கப்பட்ட குழியில், அனைவரும் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமம், நவதானியங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை போட்டனர். அதன்பின், ஓம் சக்தி என்ற சரண கோஷத்துடன், முகூர்த்தக்கால் கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. அர்ச்சகர் ஜெகதீஸ்வரன், நிர்வாகிகள் கந்தசாமி, வரதராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.