பதிவு செய்த நாள்
05
ஜன
2018
11:01
சென்னிமலை: எல்லை மாகாளியம்மன் கோவில், பொங்கல் விழாவில், ஏராளமானோர் ஆடு, கோழி பலியிட்டு வழிபட்டனர்.சென்னிமலை நகரின், காவல் தெய்வமாக விளங்கும், எல்லை மாகாளியம்மன் கோவில், பொங்கல் விழா, கடந்த, டிச.,27ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல், சிறப்பு பூஜை, வழிபாடு நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு, மாவிளக்கு பூஜை நடந்தது. பொங்கல் விழா நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு நடத்தினர். இன்று மறுபூஜை, மஞ்சள் நீராட்டத்துடன், விழா நிறைவடைகிறது.