பதிவு செய்த நாள்
05
ஜன
2018
12:01
குன்னூர்: குன்னூர் அருகே, அருவங்காடு பாலமுருகன் கோவிலில், 41வது ஆண்டு தைப்பூச திருவிழா நடக்க உள்ளது.குன்னூர் அருகே அருவங்காடு பாலமுருகன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 41வது ஆண்டாக இந்த ஆண்டு கொண்டாடப்படும் திருவிழா வரும், 31ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி காலை, 7:00 மணிக்கு கலச ஸ்தாபன பூஜை, காலை 7:30 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை, 9:00 மணிக்கு மகா அபிஷேக ஆராதனை, பகல், 12:00 மணிக்கு சுவாமி பிரகார ஊர்வலம், பகல், 12:30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கின்றன. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.