பதிவு செய்த நாள்
05
ஜன
2018
12:01
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, எம்.சி.,பள்ளியில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலில் நடந்த, ஆறாம் ஆண்டு பெருவிழாவில், 100க்கும் மேற்பட்ட சாதுக்கள் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி அடுத்த, எம்.சி.,பள்ளி ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், ஆறாம் ஆண்டு ஆராதனை பெருவிழா, நேற்று முன்தினம் மாலை, 7:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்கியது. மாலை, 6:00 மணிக்கு, ரட்சனா சுஜாதா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, இரவு, 8:30 மணிக்கு சிறப்பு வேள்வி நடந்தது. நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 6:00 மணிக்கு கோ பூஜை, 10:30 மணிக்கு சிவலிங்கத்திற்கு அபி ?ஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. பகல், 12:00 மணிக்கு மகேஸ்வர பூஜையையொட்டி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, 100க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு, ஆராதனை பெருவிழாவையொட்டி, மவுன சாமியார் மலர் தூவி, காவி உடை வழங்கினார். பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கி, சுவாமிக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, விழா ஒருங்கிணைப்பாளர் அகத்தியன் சரவணன் செய்திருந்தார்.