தர்மபுரியில் மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில் ருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2018 12:01
தர்மபுரி: தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில், திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவிலில், பன்னிரு திருமுறை மன்றம் சார்பாக, திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணிவரை நடந்த நிகழ்ச்சியில், தர்மபுரி மாவட்ட பன்னிரு திருமுறை மன்றம் சார்பாக, 20க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பங்கேற்றனர். மேலும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று, பக்தி பரவசத்துடன் திருவாசகம் பாடினர்.