கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் சனி பெயர்ச்சி விழா ஏற்பாடு தீவிரம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2011 12:12
அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் வரும் 21ம் தேதி சனி பெயர்ச்சி விழா நடக்கிறது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. மாமன்னன் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட இக்கோவிலில், ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட நவகிரஹ மூர்த்திகளும் அமைய பெற்றுள்ளது தனி சிறப்பாகும். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சி விழா, வரும் 21ம் தேதி நடக்கிறது. சனி பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்வதை முன்னிட்டு, அன்றைய தினம் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதையொட்டி கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் நடைபெறும் சனி பெயர்ச்சி நிகழ்ச்சியில், பொதுமக்கள், பொதுமக்கள், பக்தர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். சனிபெயர்ச்சி ஏற்பாடுகளை, தமிழக அரசின் ஹிந்து அறநிலைய ஆட்சித்துறை சார்பில் செயல் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.