பொங்குசனீஸ்வரர் கோவில் சனிப்பெயர்ச்சி விழா : போக்குவரத்து மாற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2011 12:12
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சனிபெயர்ச்சி விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி., குருசாமி தெரிவித்துள்ளார். வரும் 21ம் தேதி நாளை சனிபெயர்ச்சி நடப்பதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு உட்பட்ட திருக்கொள்ளிக்காடு அக்கீனீஸ்வரர் திருக்கோவிலுக்கு திருவாரூரில் இருந்து திருநெல்லிக்காவல் வழியாக வரும் பஸ்கள் மற்றும் கார்கள் சீராளத்தூரில் நிறுத்தப்படும். திருத்துறைப்பூண்டியில் இருந்து கச்சனம் வழியாக வரும் பஸ்கள் சீராளுத்தூரில் நிறுத்தப்படும். பயனிகளை இறக்கி, ஏற்றி ஆண்டான்கரை வழியாக ஆழத்தம்பாடி வந்த திருத்துறைப்பூண்டிக்கு வரும். மன்னார்குடியில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் விளக்குடி வழியாக மஞ்சவாடி பாலம் அருகே நிறுத்தப்பட்டு அங்கியிருந்து திரும்பி செல்வதுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளில் 500 போலீஸார் பணிகள் மேற்கொள்வது என்று டி.எஸ்.பி., குருசாமி தெரிவித்துள்ளார்.