பதிவு செய்த நாள்
09
ஜன
2018
12:01
பழநி : பழநி முருகன் கோயிலுக்கு வரும், வெளியூர் பக்தர்களிடம் ரூ.100 வைத்தால் ரூ.200 என ஆசைக்காட்டி ரூ.பலஆயிரம் வசூலிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல் மாவட்டம் பழநிமுருகன் மலைக்கோயிலுக்கு தைப்பூசம், சபரிமலை சீசனை முன்னிட்டு, கர்நாடக, ஆந்திரா, கேரளா, வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.அவ்வாறுவரும் பக்தர்களிடம் ஒரு கும்பல் நுாதன சூதாட்டத்தில் ஈடுபடுகிறது.
பழநி அடிவாரம், கோயில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஒரு கும்பல், நம்பர் டோக்கன் உருட்டி ரூ.50 வைத்தால் ரூ.100, ரூ.100 வைத்தால் ரூ.200 என டபுள் ஆசை காட்டி சூதாட்டம் நடத்துகின்றனர். இதனை நம்பி விளையாடும் பக்தர்கள் கொண்டு வரும் சிலஆயிரங்களை இழந்து தவிக்கின்றனர். இது தொடர்பான புகாரில் போலீசாரின் நடவடிக்கை பெயரளவில் மட்டுமே உள்ளது. இவ்விஷயத்தில் தொடர்ந்து கண்காணித்து, ரோந்தை தீவிரப்படுத்தி பக்தர்களை ஏமாற்றும் கும்பல் மீது, எஸ்.பி., சக்திவேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.எஸ்.பி., முத்துராஜன் கூறுகையில், பழநி அடிவாரத்தில் சூதாட்டம் தொடர்பான புகாரில், சிலரை கைது செய்துள்ளோம், தொடர்ந்து திடீர் ரோந்து சென்று சூதாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.